Subscribe Us

header ads

பல்கலைக்கழக மாணவன் தற்கொலை: காட்சி மடிக்கணனியில்

கொழும்பில் உள்ள பிரபல பல்கலைக்கழமொன்றில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவனொருவன் தனது காதலி காதலை முறித்துக்கொண்ட காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவர் தான் தற்கொலை செய்துகொள்ளும் காட்சியை மடிகணனியின் உதவியுடன் பதிவுசெய்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

குறித்த இளைஞன் 23 வயதானவரெனவும் , தான் தங்கியிருந்த கஹவத்தை மடலகம பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் லெப்டொப் மற்றும் மாணவன் எழுதி வைத்ததாகக் கூறப்படும் இறுதி கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

Post a Comment

0 Comments