பிள்ளைகளுக்கு பெற்றோரைவிட சிறந்த நண்பர்கள் இல்லை என்பதனை பிள்ளைகளும் பெற்றோரும் புரிந்து கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தங்காலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளைகளை சிறப்பான பாதையில் கொண்டு செல்வது தொடர்பில் பெற்றோர்களைப் போன்று அரசாங்கத்திற்கும் மாபெரும் பொறுப்பு உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோடிக் கணக்கிலான பணத்தை யாரால் வேண்டுமென்றாலும் சம்பாதித்துக்கொள்ள முடியும் எனினும் அதனை சுனாமி போன்றவைகளினால் அடித்து செல்லப்பட்டு விடும் ஆனால் அறிவு என்பது யாராலும் கொண்டு செல்ல முடியாத செல்வம் என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதனால் கல்விக்காக அர்ப்பணிப்பது அனைத்து பிள்ளைகளினதும் பொறுப்பாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.


0 Comments