Subscribe Us

header ads

சவுதி அரசாங்கத்திடம் இருந்து அன்பளிப்பாக வழங்கப்பட்ட அல்குர்ஆன் பிரதிகள் மற்றும். இஸ்லாமிய நூல்கள் வினியோக நிகழ்வு

சவுதி அரேபிய அரசாங்கத்திடமிருந்து அன்பளிப்பாக பெறப்பட்ட சுமார் 30,000 அல்குர்ஆன் மற்றும் பெறுமதி வாய்ந்த கிதாபுகள் இலங்கையில் உள்ள மத்ரஸாக்கள், அநாதை நிலையங்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களுக்கு வினியோகிக்கும் நிகழ்வு 20/10/2015 ஜம்ய்யதுஸ் ஸபாப் நிறுவன கேட்போர் கூடத்தில் மொளலவி எம்.எஸ்.எம் தாஸிம் தலைமையில் இடம் பெற்றது.

இதில் சவுதி அரேபிய பிரதி நிதி, சவுதி அரசாங்கத்திடமிருந்து அல்குர்ஆன் பிரதிகளை பெற உதவிய புனித ஹரம் ஸரீபில் கடமையாற்றும் ஸாதிக் ஹாஜியார், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தலைவர், பொதுச்செயலாளர் , முஸ்லிம் கலாசார திணைக்கள பிரதிப்பணிப்பாளர் மற்றும் நிறுவன தலைவர்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். 

-Cader Munawwar-

Post a Comment

0 Comments