பீகாரை சேர்ந்த வாய் பேசாத, காது கேளாத பெண் கீதா, சிறுமியாக இருந்த போது பாகிஸ்தானுக்கு தவறாக சென்று விட்ட பிறகு, அவரை அங்குள்ள எதி அறக்கட்டளை என்ற அமைப்பு, 13 ஆண்டுகளாக நல்ல முறையில் பராமரித்து வந்திருக்கிறது.
நாடு திரும்பியுள்ள கீதாவை இத்தனை ஆண்டு காலம் பராமரித்து வந்த எதி அறக்கட்டளை அமைப்புக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்ததுடன், ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
ஆனால் இந்த நிதியை எதி அறக்கட்டளை அமைப்பு ஏற்க மறுத்து விட்டது.
இதுபற்றி அந்த அமைப்பின் அதிகாரி அன்வர் காஸ்மி கூறுகையில், ‘‘எந்த நாட்டின் தலைமையிடம் இருந்தும் நன்கொடை பெறுவது இல்லை என்பது எங்கள் கொள்கை. எனவே பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள ரூ.1 கோடி நன்கொடையை நன்றியுடன் ஏற்க மறுக்கிறோம்’’ என குறிப்பிட்டார்.

0 Comments