Subscribe Us

header ads

நோய்களுக்கு அரண் போடும் மீன்கள்


அசைவ உணவுகளில் அதிகம் நன்மை தருவது மீன். உணவில் அடிக்கடி மீனைச் சேர்த்து வந்தால் எந்த நோயும் நெருங்காது என்கிறார்கள் மருத்துவர்கள். 

•  அதிகபுரதச்சத்துள்ள மீனில் ஓமேகா 3 அமிலம் உள்ளது. இது பல்வேறு நோய்களில் இருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது. 

•  மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் பாதிப்பு ஏற்படாது. 

•  மூளைக்கும், கண் பார்வைக்கும் மீன் மிகவும் பயனளிக்கிறது. மீன் உணவில் உள்ள ஓமேகா 3 அமிலம் மூளையைச்சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. 

•  தொடர்ந்து மீன் சாப்பிடுவதன் மூலம், வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது. 

•  வெள்ளை மீன் உணவுகளைக் காட்டிலும் கருப்பு மீன்கள், சாலமன் மீன்கள் போன்றவை சிறந்த பலன் அளிக்கும். 

•  ஞாபகசக்தி திறன் குறைபாடு, நரம்புத்தளர்ச்சி நோய் போன்ற பல நோய்கள் குணமடையும். 

•  இரத்தக்கட்டு, இரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்சனை போன்ற எதுவும் வராது. 

•  இதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பைத் தருகிறது மீன் உணவு. மீன் எண்ணெயைச் சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவு குறையும்.

Post a Comment

0 Comments