Subscribe Us

header ads

அனர்த்த எச்சரிக்கை சமிக்ஞை தகவல் பரிமாற்றக் கருவிகளை பரிசோதிக்கும் குழுவினர் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம்

அபு அலா –


அனர்த்த முகாமைத்து அமைச்சின் கீழ் இயங்கிவரும் அனர்த்தம் பொடர்பான எச்சரிக்கை சமிக்ஞயினை பொதுமக்களுக்கு வழங்கும் வீ.எச்.எப் தகவல் பரிமாற்றக் கருவிகளை பரிசோதிக்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒரு குழுவினர் நேற்று திங்கட்கிழமை (21) அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்தனர்.

லெப்டினன் கேணல் டபில்யு.எஸ்.என்.பெரேரா தலைமையில் விஜயம் செய்த இக்குழுவில், அவசர செயற்பாட்டு நிலைய பொறுப்பதிகாரி பி.கொடித்துவக்கு, தகவல் பரிமாற்ற பொறுப்பதிகாரி எஸ்.அப்பு ஆராச்சி மற்றும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.ஏ.சக்கில் அஹமட் ஆகிய குழுவினரோ இந்த விஜயத்தை மேற்கொண்டனர்.

இவ்வாறு மேற்கொண்ட குழுவினர், அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையில் பொருத்தப்பட்ட அனர்த்தம் பொடர்பான எச்சரிக்கை சமிக்ஞையை பொதுமக்களுக்காக வழங்கும் வீ.எச்.எப் தகவல் பரிமாற்றக் கருவி கடந்த சில நாட்களாக சீரற்று காணப்பட்டு வந்தது. இதனை இக்குழுவினர் சீர் செய்துவிட்டு அக்கருவி தொடர்பான தகவல் பரிமாற்றங்களை எவ்வாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்திலிருந்து பெருவது என்பபற்றி மிகத்தெளிவான விளக்கத்தினை கேணல் டபில்யு.எஸ்.என்.பெரேரா அங்கு கடமையிலிருந்த வைத்தியர் நைரோஸா மற்றும் ஆண்கள் விடுதியில் கடமைபுரியும் உத்தியோகத்தர்களுக்கும் வழங்கி வைத்தார்.

கல்முனை, காரைதீவு, ஒலுவில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் போன்ற பிரதேசங்களில் பொருத்தப்பட்டிருக்கும் அனர்த்த எச்சரிக்கை சமிக்ஞை வழங்கும் வீ.எச்.எப் தகவல் பரிமாற்றக் கருவிகளை இக்குழுவினர் இந்த விஜயத்தின்போது பரிட்சித்து பார்த்தமையும் குறிப்பிடத்தக்கது.





Post a Comment

0 Comments