Subscribe Us

header ads

எங்கே அந்த மான நஸ்ட ஈடு வழக்கு..??

.

கடந்த பொதுத் தேர்தல் காலப்பகுதியில் கலாநிதி இஸ்மாயில் அவர்கள் வெற்றி பெற்றாலும் பாராளுமன்றம் செல்ல முடியாது என்ற விடயம் மிகவும் சூடு பிடித்துக் காணப்பட்டது.இது உண்மையா? பொய்யா? என்பது மிகவும் காரசாரமாக விவாதங்களுக்கு உட்பட்டிருந்தது.இது உண்மையாக இருக்கும் என்ற மு.கா பக்க நியாயங்களினை பார்க்கும் போது அதனை உளவியல் ரீதியாக ஏதாவது கூறி அ.இ.ம.கா அணியினர் எதிர் கொண்டிருந்தனர்.இது உண்மையாக இருந்தாலும்,பொய்யாக இருந்தாலும் ஒரு சமூகத்தினை மடையனாக்கி அதில் வாக்கினை பெறவும்,இல்லாமல் செய்யவும் முயற்சி என்பது தெளிவானது.ஒரு குறித்த சமூகத்தினை மடயனாக்கி அரசியல் செய்பவர்களினை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.இவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்படல் வேண்டும்.

இது தனது வெற்றியினைத் தடுக்கும் ஒரு விடயம் எனக் கூறி அ.இ.ம.கா அணியினர் இத் தேர்தலின் பிற்பாடு அமைச்சர் ஹக்கீம் மீது 500 மில்லியன் மான நஸ்ட ஈடு கோரி வழங்குத் தாக்கல் செய்யப்போவதாக தேர்தல் பிரச்சார மேடைகளில் குறிப்பிட்டிருந்தனர்.ஆனால்,தேர்தல் முடிந்து ஒரு மாதம் கடந்து சென்ற போதும் எது வித வழக்குத் தாக்கல்களும் அ.இ.ம.கா அணியினரால் தாக்கல் செய்யப்பட்டதாக அறிய முடியவில்லை.இவ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு கிடைக்கப்பெறும் முடிவு யார் மக்களினை மடயனாக்கினார்? என்பதை மக்களுக்குத் தெளிவாக்கும்.எனவே,தற்போது இவ் வழக்குத் தாக்கல் காலத்திற்கு மிகவும் அவசியாமனது.உப்பைத் திட்டவன் தண்ணீரினை குடித்தே ஆக வேண்டும்.


ஆனால்,அ.இ.ம.கா அணியினர் வழக்கினைத் தொடர்வார்களா? என்பதே இங்குள்ள வினா.வழக்குத் தொடராத பட்சத்தில் தவளை தன் வாயால் கெடுவது போன்று அவர்களே தங்கள் பக்க குற்றச்சாட்டினை ஒப்புக் கொள்வது போன்றாகிவிடும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
         (akmhqhaq@gmail.com)
      சம்மாந்துறை
        **mHq**


Post a Comment

0 Comments