உங்கள் நண்பருக்கு ஸ்கைப்பில் கால் செய்யமுடியவில்லையா? உங்களுக்கு மட்டும் அல்ல உலகின் பல இடங்களில் ஸ்கைப் செயலிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஸ்கைப்பை கணினி மற்றும் மொபைலில் பயன்படுத்தும் பல பயனர்கள் அதை பயன்படுத்துவதில் பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். முக்கியமாக இந்தியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் ஸ்கைப்பில் கால் செய்வது மற்றும் நிலைதகவலை மாற்றுவதில் சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள். ஆனால் தகவல் அனுப்புவதில் எந்த பிரச்சனையும் இல்லை.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள மைக்ரோசாப்ட், “தற்போது ஸ்கைப்பில் எழுந்துள்ள பிரச்சனை பற்றி கவனத்தில் கொண்டுள்ளோம். விரைவில் பிரச்சனைகள் தீர்க்கப்படும்” என தெரிவித்துள்ளது.


0 Comments