Subscribe Us

header ads

போதைப் பொருள் வர்த்தகர் மொஹமட் சித்தீக்கை நீதிமன்ற வளாகத்தில் சந்தித்தவர் யார்?


கைதி ஒருவருக்கு விஷேட வசதிகள் வழங்கிய சம்பவம் தொடர்பில் 3 சிறைச்சாலை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் சர்வதேச போதைப் பொருள் வர்த்தகரான மொஹமட் சித்தீக்  என்பவருக்கு கொழும்பு பிரதான நீதவான் சிறைச்சாலை வளாகத்தில் சிறைச்சாலை அதிகாரிகளினால் விஷேட வசதிகள் வழங்கப்பட்டமை தொடர்பான வீடியோ கட்சிகள் ஊடகங்களில் வெளியாகின.
இதனை தொடர்ந்து கிடைக்க பெற்ற அறிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ரோஹன புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் சட்டத்தரணி ஒருவர் பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
6 மாத காலமாக இரகசிய பொலிஸாரின் பொறுப்பில் இருந்த மொஹமட் சித்தீக் நேற்று முன்தினம் முதற் தடவையாக இரகசிய பொலிஸாரினால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
02
இதன்போது மொஹமட் சித்தீக் நீதவானிடம் அழைத்துச் செல்ல முன்னரும். நீதிமன்ற சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் வெளியிலிருந்து உள்ளே வந்த தொப்பி மற்றும் ஜுப்பா அணிந்த ஒருவர் மொஹமட் சித்திக்கின் அருகாமையில் நடமாடியமை ஊடகக் கேமராக்களில் பதிவானது.
01
அதேவேளை மொஹமட் சித்தீக்கிற்கு நீதிமன்ற சிறைச்சாலையில் வேறு எந்தவொரு கைத்திக்கும் வழங்கப்படாத சலுகை வழங்க சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதாவது குறித்த தொப்பி மற்றும் ஜுப்பா அணிந்து அங்கு நடமாடிய நபருக்கு நீதிமன்ற சிறைச்சாலை உள்ளே மொஹமட் சித்தீக்கை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட விசேட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
03
இது தொடர்பில் யாருக்கும் சந்தேகங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக குறித்த தொப்பி மற்றும் ஜுப்பா அணிந்த நபரும் கைதிகளில் ஒருவராக காட்டுவதற்கு கையில் விலங்கு போடப்பட்டு நீதிமன்ற சிறைசாலைக்கு அழைத்துச் செல்ல சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
04
பின்னர் குறித்த நபர் கையில் விலங்கு இல்லாமல் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறுவதும் ஊடங்களில் ஒளிபரப்பாக்கப்பட்டது.
05
குறித்த சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ரோஹன புஸ்பகுமார ; சம்பவம் தொடர்பில் 3 சிறைச்சாலை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவி கோரப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை போதைப் பொருள் வர்த்தகரான மொஹமட் சித்தீக்கை நீதிமன்ற வளாகத்தில் சந்தித்தவர் யார்? அவர்கள் இருவரும் கலந்துரையாடியது என்ன? எனபது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாகவும், குறித்த தொப்பி மற்றும் ஜுப்பா அணிந்த நபர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். 

Via : Daily Ceylon

Post a Comment

0 Comments