இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினை குற்றவாளி என அறிவித்து, தூக்கில் போட வேண்டும் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றபோதே மதுரை ஆதீனம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு ஐ.நா அறிக்கை தொடர்பில் நிருபர்களிடம் கூறுகையில்,
பல்லாயிரம் தமிழர்களை கொன்று குவித்த, இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஐக்கிய நாடுகள் சபை குற்றவாளி என அறிவித்து அவரை தூக்கில் போட வேண்டும்.
இவ்வாறு செய்தால்தான், உலக நாடுகளுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இவருடைய கருத்து தற்போது அதிகரித்த சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments