Subscribe Us

header ads

பெண்கள் வீட்டுப்பணிப்பெண்களாக செல்வதை நிறுத்த தீர்மானம் !


நமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக செல்வதை அடுத்த ஐந்து வருடங்களில் தடுத்து நிறுத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
அது பற்றி மேலும் கருத்து தெரிவித்த அவர்;


வெளிநாடு செல்லும் அப்பாவிப் பெண்கள்படும் பாடு, வேதனை அனைத்தினையும் அவதானித்த பின்னரே இவ்வாறானதொரு முடிவு எடுக்க தீர்மானித்துள்ளோம். இவ்வாறான வேதனைகளை வழங்காது அனைவருக்கும் நன்மை பயக்கும் விதத்திலும் நாட்டின் கௌரவத்தினை பாதுகாக்கும் வகையிலும் அடுத்த ஐந்து வருடங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் பெண்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


நிவித்திகல பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் மாணவர் முன்ணணியினர் ஏற்பாடு செய்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

Post a Comment

0 Comments