PASS சமூக அமைப்பின் ஏற்பாட்டில் புத்தளம் வெட்டாளை அசன்குந்தூஸ்
முஸ்லிம் வித்தியாலயத்தில் கணித பாட செயலமர்வு கடந்த (19-09-2015) நடைபெற்றது.
பாடசாலை அதிபர் ஜப்பார்
அவர்களின் பூரண ஒத்துழைப்புடன் நேற்றைய முன்தினம் மாணவர்களுக்கு கணித பாட
வினாத்தாள்கள் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவ்வினாத்தாள்களுக்கான செயலமர்வு
நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இச்செயலமர்வில் மொறட்டுவ
பல்கலைகழக மாணவன் மொகமட் ரிஷான் வளவாளராக கலந்து கொண்டார். இச்செயலமர்வுக்கு Legend Bajar அனுசரணை வழங்கியமை
குறிப்பிடத்தக்கது.
-Wasim Akram-



0 Comments