Subscribe Us

header ads

அமைச்சரவை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் கட்சிகளுக்குள் கருத்து முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது

- அபூ அஸ்ஜத் -


நடை பெற்று முடிந்த 8 வது பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமைச்சரவை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் கட்சிகளுக்குள் கருத்து முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது.பாராளுமன்றத்;துக் தெரிவான உறுப்பினர்களில் பலர் தமக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று அறிக்கைக்கு மேல் அறிக்கைகளை விட்டுக்கொண்டுவருகின்ற நிலையில் இன்னும் இரு தினங்களுக்கு அமைச்சரவை நியமனம் நீட்டப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு அறுதி பெரும்பான்ரமை இல்லாத நிலையில் ஜக்கிய மக்கள் சுத்நதிர முன்னணியின் ஆதரவை கோறி தேசிய அரசாங்கத்துக்கு செல்லலாம் என்று அழைப்புக்கள் விடுக்கப்பட்டுவந்த நிலையில் அவர்களும் அமைச்சரவை உறுப்பினர்கள் தொடர்பில் பேரம் பேச ஆரம்பித்ததினால் ஆத்திரம் கொண்;ட ஜக்கிய தேசிய கட்சியின் செயலாளர் கபீர் ஹாஷிம் அவர்களது பங்களிப்பு இல்லாமல் அரசாங்கத்தை அமைக்க நாம் தயாராகவுள்ளதாக சூளுரைத்திருப்பதும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதொன்றாகும்,

இதற்கு அடித்தளமாக மூன்று உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதும்,அந்த மூவரும் ஜக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் என்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியுள்ளது.வெளியுறவுத் துறை அமைச்சராக மங்கள சமரவீரவும்,மீள்குடியேற்ற அமைச்சராக டீ.எம்.சுவாமி நாதனும்,நீதி அமைச்சராக விஜயதாச ராஜபக்ஷவும் நியமிக்கப்பட்டுள்ளதையும் இங்கு பார்க்க முடிகின்றது.

இந்த நிலையில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினை களைத்துவிட்டதாகவும்,இனிமேல் சுதந்திரக்கட்சிக்காரர்கள் கை சின்னத்திலேயே தமது அரசியல் நடவடிக்கையினை முன்னெடுக்கவேண்டும் என்று கட்சியின் தலைவரும்,ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அறிவித்ததையடுத்து பொதுஜன ஜக்கிய முன்னணியின் செயலாளர் நாயகம் சுசில் பிரேம ஜயந்த தமது ராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதிக்கு இன்று பிற்பகல் (2015-08-25)அனுப்பி வைத்துள்ளார்.இவ்வாறானதொரு நிலையில் இலங்கை அரசியலில் மற்றுமொரு புதிய அணி உருவாகுவதற்கும் இந்த அணியானது மைத்திரி-ரணிலுக்கு எதிரான மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியாக மாறியுள்ளதை பார்க்கமுடிகின்றது.

ஆரசியல் ஸ்திரத்தன்மை,பாராளுமன்றத்தின் பலம்,நாடடினது எதிர்காலம் என்பன தொடர்பில் எந்த தீர்மாணத்தையும் அரசு எடுக்க நேர்ட்டால் அதனை போதுமான வீரியத்துடன் முன்னெடுக்கமுடியாத நிலை தற்பொது ஏற்பட்டுள்ளது.ஆனால் குறைக்கப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் மீண்டும் வெயளிவருவதற்கான ஒரு அடித்தளமாக இந்த நகர்வு இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.எது எவ்வாறு இருந்தாலும் எமது நாட்டின் அரசியல் கலாசாரம் என்பது ஒருத்தரை ஒருத்தர் தங்கிவாழும் கலாசாரத்தை கொண்டது என்பது யதார்த்தமாகும்.

புpரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த அரசாங்கத்தில் சிறுபான்மை மக்களுக்கு அதிகப்படியான நன்மைகள் இருப்பதாக பல கட்சிகள் கூறிவருகின்ற போதிலும்,அமைச்சரவையில் எத்தனை சிறுபான்மை பிரதி நிதிகளுக்கு பொறுப்பு வாய்ந்த அமைச்சுக்களும்,பிரதி அமைச்சுக்களும் வழங்கப்படுகின்றது என்பதை வைத்த இந்த மக்களது எதிர்காலத்தினை மதிப்பீடு செய்யலாம்.

குறிப்பாக வடக்கு,கிழக்கு மக்களின் அபிலாஷைகளை நிறைவு செய்து கொள்ள கிடைக்கப் பெறும் பதவிகள் எத்தனை என்பது தான் எதிர்காலத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் எந்த கட்சி தமது அதிகாரத்தினை கைப்பற்றும்,அல்லது உறுப்பினர்களின் ஆசனங்களை அதிகரித்து கொள்ளும் என்பதை மதிப்பிட முடியுமாக இருக்கும் என்பது யதார்த்தமாகும்.

கண்ணாடிக் கூண்டுக்கு கல்லடிப்பதானது அது தமக்கு தானே எதிராக செயற்படுகின்றதற்கு ஒப்பாகும்.இந்த நிலையில் இருந்து மாறி  நாட்டினதும்,மக்களினதும் நிலையான சமாதனம்,எதிர்ப்பார்ப்புக்கள் என்பனவற்றினை கவனத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் செயற்படுவது காலத்தின் தேவையாகும்.

Post a Comment

0 Comments