நியூயார்க் நகர ஹோட்டல்களில் வசூலிக்கப்படும் அதிகமான வாடகையிலிருந்து தப்பிக்க சுற்றுலா பயணிகளுக்கு புதுமையான பட்ஜெட் இரவு விடுதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகள், உள்நாட்டில் வேலை தேடி வருபவர்கள் என அமெரிக்காவின் நியூயார்க் நகரம், மக்களால் நிரம்பி வழிகிறது. இப்பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள் கேட்கும் அதிகபட்ச வாடகையை தந்தாக வேண்டிய கட்டாயத்துக்கு மக்கள் ஆளாகின்றனர்.
இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கும் விதமாக, தூங்குவதற்கெனவே பிரத்யேகமாக கார், வேன் போன்ற வாகனங்களில் படுக்கை அமைத்து குறைந்த வாடைகையில் வழங்கும் சேவையளித்து வருகிறது ஏர்பிஎன்பி(airbnb) இணையதளம். குறைந்தது 22 அமெரிக்க டாலர் முதல், 39 அமெரிக்க டாலர் வரை(இந்திய மதிப்பில் சுமார் 1500 முதல் 2500) ஒரு இரவு தங்குவதற்கு இங்கு வசூலிக்கப்படுகிறது.
படுக்கை மட்டுமே கொண்டிருக்கும் இதுபோன்ற வாகனங்கள், வாடிக்கையாளர்கள் கழிவறைகளை பயன்படுத்திக் கொள்வதற்கான வசதிகளை நகரில் உள்ள சில உணவகங்களில் இலவசமாக கழிவறை உபயோத்துக் கொள்ள அனுமதி பெற்றுள்ளது. இந்த வாகனங்கள் நியூயார்க்கின், முக்கிய பகுதியான மன்ஹாட்டனின் கிழக்கு நதியருகே நிறுத்தப்படுவதால் நிம்மதியான உறக்கத்துக்கு உத்தரவாதம் தருகிறது இந்த நிறுவனம்.
பட்ஜெட்டில் நியூயார்க்கை சுற்றிப்பார்க்க நினைப்பவர்களுக்கு இவை சரியான தேர்வாக அமையும் என்று நம்பலாம்.
0 Comments