25 வருட காலமாக புத்தளம் மாவட்டம் இழந்துவந்துள்ள சிறுபான்மை பாராளுமன்ற பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்துக்கின்ற PPAF இன் முயற்சியின் செயற்பாடான ஒவ்வொரு வாக்கெடுப்பு பிரிவு பிரதேச மக்களை இந்த பணியில் உறுதி படுத்தும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
அதன் தொடரில் புத்தளம் நகர வாக்கெடுப்பு பிரிவு 33 , 35 ற்கான செயற்குழுக்கள் நிறுவப்பட்டது. இந்நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (06.03.2015), சனிக்கிழமை (07.03.2015) இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் போது சிறுபான்மை பாராளுமன்ற பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்த அரசியல் விழிபுணர்வினூடாக மக்கள் சக்தியை உருவாக்குதல், ஒவ்வொரு பிரதேச பிரிவுக்கும் செயற்குழு உருவாக்குதல், அதிலிருந்து புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாஷைகலை நிறிவேற்றுகின்ற பொறுப்பு கூறக்கூடிய தலைமைத்துவ சபையை உருவாக்குதல் போன்ற செயற்பாடுகள் விரிவாக தெளிவு படுத்தப்பட்டன.








0 Comments