Subscribe Us

header ads

மஹாவம்சம் பொய்யிலிருந்து மீளும் வரை இலங்கை சமாதானம் அடையாது.

  • ' சங்யுக்த நிகாயாவில் காமிணி சங்யுக்தவில் வருகின்ற யோதஜீவ சூத்திரத்தில் கிராம தலவனொருவனாகிய யோதஜீவ என்பான் புத்தரிடம் இவ்வறு கேட்கிறான் '' புத்த பெருமானே, யுத்தம் புரியும் போது யுத்தத்தில் ஈடுபாட்டு இறப்பவர்கள் சுவர்க்கம் செல்வார்களா என்று.'' புத்தர் இதற்கு பதிலளிக்காமல் மூன்று முறை மௌனம் காக்கிறார். மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கேட்கும் போது புத்தர் சொல்கிறார் ''.யுத்தமொன்றின்போது தாக்குவதற்கு முயற்சிக்கும் போது யுத்தத்தில் ஈடுபடுபவனது எண்ணம் மற்றவனை கொண்று விட வேண்டும், தாக்க வேண்டும், வெட்ட வேண்டும், அழித்து விட வேண்டும் என்பதேயாகும். அந்த சந்தர்ப்பத்தில் அவன் தாக்குதலுக்கு ஆளாகி மரணிப்பானேயானால் அவன் மீண்டும் நரகத்தில்தான் பிறப்பான்" என்று கூறினார். யுத்தத்தில் ஈடுபடுவோருக்கு இதுதான் நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. 
  • புத்த தர்மத்தை பாதுகாக்க யுத்தம் புரிவோர் சுவர்க்கம் செல்வதாக எந்த ஒரு இடத்திலும் புத்தர் சொல்லவில்லை. 
  • புத்தருடைய இந்த போதனை மஹனாம பிக்குவுக்கோ அக்கலத்தில் ஆட்சி செய்த தாதுசேன அரசனுக்கோ ஏற்புடையதாக இருக்கவில்லை. தாதுசேன அரசன் மஹானாம தேரரின் பக்தனும், மருமகன் முறையுமாவான். இலங்கையை 30 வருட காலம் ஆட்சி செய்த பாண்டவரை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றிய தாதுசேனனுக்கும் அவனது படையினருக்கும் புத்தர் போதித்த தர்மத்தின்படி தாம் யுத்தத்தின்போது புரிந்த கொலைகள் பற்றிய அச்சம் இருந்தது. இந்த சந்தர்ப்பத்தில்தான் மஹானாம தேரோ முன்வந்து '' பாவமில்லா யுத்தம்" என்ற பொய்யை உருவாக்கி அரசனையும், படை வீரர்களையும் ஊக்குவித்தார் என்று எண்ணுவது நியாயம். 
  • அதாவது அவர்களை மன ஆறுதல் படுத்துவத்ற்க்ககும். அவர் புத்த்ருடைய போதனைகளை தலை கீழாக மாற்றி முற்றிலும் மாறுபட்ட ஒரு புத்த சமயத்தை நிர்மாணித்ததோடு, அது 15 நூற்றாண்டுகளாக இலங்கையின் அரசியலை கொண்டு நடாத்துவதில் முன்னுரிமை பெற்றுள்ளது. மஹானாம தேரர் புதிய யுத்தம்சார்ந்த புத்த தர்மமொன்றை உருவாக்கியது மட்டுமல்ல. புதியதொரு யுத்தம்சார்ந்த புத்தரையும் உருவாக்கினார். மஹாவம்சத்தில் வருகின்ற புத்தர் சித்தார்த்த கௌதம புத்தரை விட முற்றிலுமாக வேறுபட்டவர். திரிபிடகயாவில் சந்திக்கும் புத்தர் போலல்லாது மஹாவம்சத்தில் சந்திக்கின்ற புத்தர் தந்திரத்திலும்,மிகைப்படுத்தப்பட்ட தற்பெருமையுடன் கூடிய பலத்தினால் எதிரிகளை அடிமைப்படுத்துபவராக உள்ளார் அவர் புத்தர் செய்தது போல உயிரினங்களுக்கு கருணை செலுத்துபவராக இல்லை. மஹாவம்ச புத்தருக்கு பிணைப்புகள் (சொந்த பந்தங்கள்) உண்டு. அவருக்கு தேவையானதாக இருந்ததெல்லாம் எதிர்காலத்தில் தனது தர்மத்தை பாதுகாக்கும் இலங்கையை நிர்மாணிப்பதே. இந்த அரசியல் செயற்றிட்டத்தில் கடவுளர்களெல்லாம் அவரது நண்பர்களாகினர். அக்கிரமக்காரனாகிய விஜயன் அவர் பயன்படுத்திய ஒருவனாவான். இலங்கையின் ஆரம்ப கால அரக்கர்கள் விஜயனது எதிரிகளாவர். மஹாவம்சத்தில் வருகின்ற புத்தர் உண்மையான புத்தர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் செய்யாததை செய்பவர். இலங்கைக்கு வந்து அரக்கர்களுக்கு பன (மத) போதனை செய்யாமல் அவர்களை விரட்டி விடுகிறார். த்ரிபிடகயவில் புத்தர் ஒரு போதும் அரக்கர்களை எதிரிகளாக கருதவில்லை. அரக்கர்களுடனான சந்தர்ப்பங்களின் போது புத்தர் ஆலவக எனும் அரக்கனை வசப்படுத்துவது தர்ம போதனை , பொறுமை, ஞானம் ஆகியவை மூலமேயாகும். இன்னுமொரு அரக்கனாகிய சீவக என்பான், அனாதபிண்டிக எனும் ஒரு பிரபு வர்க்கத்தவரிடம் போய் புத்தரை சந்திக்குமாறு இறைஞ்சுகிறான். அனால் மஹாவம்சத்தின்படி பிறகு தமிழர்களை கணித்தது போல அரக்கர்களும் பிறப்பிலேயே கெட்டவர்கள். மஹாவம்சத்தில் வரும் புத்தர் மழை, புயல், இருள் போன்றவற்றை தோற்றுவித்து அவர்களை பயமுறுத்தி உள்ளார். அவ்வறு செய்து அவர்களை புனித பூமியிலிருந்து (இலங்கையிலிருந்து) விரட்டியடித்துள்ளார். 
  • தற்கால இலன்கையில் சிவில் சமூகத்தாரிடையே சமாதனத்தை உருவாக்க முடியாமல் இருப்பது உரிமையாளர்கள் (பௌத்த சிங்களவர்கள்) - பிறத்தியார் (ஏனைய மதத்தினர்) என்ற எண்ணக்கருவினாலேயாகும் பௌத்தர்கள் தங்களை இலங்கையின் ஏக போக உரிமையாளர்கள் எனவும், அன்னியவர்கள் வெளியால் வந்த அறிமுகமற்றோராகவும் எண்ணுகிறார்கள். அன்னியர்களுக்கு நாட்டினுள் எந்த ஒரு உரிமையும் இல்லை. இது மஹாவம்சம் சொல்லும் புத்த தர்மத்தினால் உருவாக்கப்பட்டுள்ளதாகும். மஹாவம்சத்தின்படி புத்தர் தனது மரண படுக்கையின் போது '' எனது தர்மம் அழியாமல் இருப்பது இலங்கையிலே என்பதால், அதனை கவனமாக பாதுகாத்துக்கொள்ளுமாறு" கடவுளர்களிடம் வேண்டியுள்ளார். ஆனால் புத்தருடைய இறுதி சில தினங்களை 'மஹா பரினிப்பான சூத்திரத்தில்" -தெளிவாக குறிக்கப் பட்டுள்ளது. ஆனால் அதில் புத்தர் இவ்வறான ஒரு வேண்டுகோளை விடுத்ததாக எந்த இடத்திலும் இல்லை. தனது தர்மம் சுத்தமாக பாதுகாக்கப்படுவது இலங்கையில் என்று புத்தர் ஒருபோதும் சொல்லவில்லை.அதை பாதுகாக்குமாறு கடவுளர்களிடம் வேண்டியதாகவும் இல்லை. கடவுளர்களிடம் சாட்டப்பட்டதாக கூறுவது மஹாவம்சத்தின் மற்றுமொரு பொய்யாகும். (இஉந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடடப்பட்ட) யோதஜீவ சூத்திரத்தில் புத்தருடைய பதிலைக் கேட்ட யோதஜீவ அழுகிறார். அவர் ஏன் அழுகிறார் என்றால் பொய்யான வழிகாட்டல்களினால் யுத்தத்தின்போது இறப்பவர்கள் சுவர்க்கம் புகுவார்கள் என்று தவறாக நீண்ட காலமாக யோதஜீவ வழிக்காட்டப் பட்டமைக்காகும் என புத்தர் குறிப்பிடுகிறார். 
  • மஹானாம எனும் தேரர் மஹாவம்சத்தை எழுதி 15 நூற்றாண்டுகள் கழிந்துள்ள போதிலும் அவரது இல்லற துறவர சீடர்களால் நாம் வஞ்சிக்கப்பட்டும், ஏமாற்றப்பட்டும், வழிகெடுக்கப்பட்டும் உள்ளோம். மஹாவம்ச புத்த தர்மம் சொல்லுவது என்னவென்றால், இலங்கை பௌத்தர்களின் புனித தேசம். பௌத்தர்களுக்கு பௌத்தர்கள் அல்லாதவருடன் இங்கு வசிக்க இயலாதென்பதால் யுத்தம் புரிந்து அவர்களை (அன்னியர்களை) விரட்டி விடுவது பாவமான காரியமல்ல என்பதேயாகும். இந்த பொய்யினால் பெரும்பான்மையினருக்கும், சிறுபானமையினருக்கும் இடையில் உள்ள உறவை சீர்குலைத்துள்ளனர். நிந்த மஹாவம்ச பொய்யிலிருந்து மீளும்வரை இலங்கைக்கு சமாதானம் வராது.
  • ''ராவய" 03/08/2014 ( 5 ஆம் பக்கம்)
  •  ஆங்கிலம் மூலம் : திசரணி குணசேகர 
  • சிங்களத்தில்: ஹேமந்த ரணவீர 
  • தமிழில்: எம் எல் ஹாஜா சகாப்தீன்

Post a Comment

0 Comments