Subscribe Us

header ads

TATOOS ஆபத்தை பற்றி அறிந்து கொள்ளுங்கள்



இளம் பெண்கள் தங்கள் அழகை மேலும் மெருகூட்டிக் கொள்ள, மெகந்தி இடுவதையும், டாட்டூஸ் (பச்சை குத்துதல்) வரைந்து கொள்வதையும் நவீன நாகரிகமாக கருதுகிறார்கள். ஆனால் இப்படி வரைந்து கொள்வது ‘லுக்கே மியா‘ என்னும் ஒருவித புற்று நோய்க்கு வழி வகுப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல்கலைக்கழகம் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. அந்த நாட்டில் ஆண்களைவிட பெண்களுக்கு இரு மடங்கில் ஏ.எம்.எல். (லுக்கே மியா) என்னும் ஒரு வித ரத்தப் புற்றுநோய் ஏற்படுகிறது. வெளிநாட்டில் வசிக்கும் பெண்களைவிட இங்குள்ள பெண்கள் 63 சதவீதமும், இருபாலரும் 78 சதவீதத்திற்கும் அதிகமாகவும் இந்த புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதற்கு என்ன காரணம் என்று ஆராயப்பட்டதில், கைகளில் அழகிற்காக வரைந்து கொள்ளும் மெகந்தி ஒரு வகை காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது. அதில் உள்ள ரசாயனம் இந்த நோய் தாக்க வாய்ப்பாக அமைகிறது. மேலும் அவர்களின் உடலில் சூரிய ஒளிபடுவது குறைவாக இருப்பதும் காரணம் என்று தெரிகிறது. ஆய்வாளர்கள் இதுபற்றி கூறுகையில், ‘ஆண்களும், பெண்களும் ஒரே சூழலில் வசிக்கிறோம். 

ஒரேவித உணவையே உண்கிறோம். ஆனால் பெண்களுக்கு மட்டும் அதிக அளவில் ஏ.எம்.எல். பாதிப்பு ஏன் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. இங்குள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் அவர்கள் மெகந்தியோ, டாட்டூசோ வரைந்திருப்பது மட்டுமே‘ என்றார். இயற்கையான மருதாணியில் ஆபத்து உண்டா என்றால் அதுபற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

Post a Comment

1 Comments

  1. I really like your wordpress web template, exactly where did you obtain it from? this page

    ReplyDelete