தென்கிழக்கு சீனாவில் அமைந்துள்ள குவாங்டொங் மாகாணத்தின் குவாங்ஸுஹவ் நகரத்தில் புதிதாக ஒரு ரிங் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
ரிங் ரோடு அமைக்க முடிவு செய்த காண்ட்ராக்டர்கள் அவ்விடங்களில் வசித்தவர்களிடமிருந்து அவர்களின் குடியிருப்புகளை வாங்க எண்ணினர். பலர் அவர்கள் கேட்ட விலைக்கு ஒப்புக்கொண்டு வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.
அந்த விலைக்கு ஒப்புக்கொள்ளாத சிலர் அவர்களது இடங்களை விற்க முன்வரவில்லை. எனினும், மனம் தளராத காண்ட்ராக்டர்கள் அவர்களது குடியிருப்பைச் சுற்றியே ரிங் ரோட்டினை அமைத்துள்ளனர்.
இந்த ரிங் ரோடு சமீபத்தில் செயல்பாட்டுக்கு வந்ந்துள்ளது. இதையடுத்து, எல்லா நேரமும் பெரும் சப்தத்துடன் சுற்றிச்சுற்றி வண்டிகள் போய்வருவதால் தூக்கம்கெட்டு தவித்துவருகின்ற அவர்கள், காண்ட்ராக்டர்கள் கேட்ட விலைக்கே வீட்டை விற்றிருக்கலாமோ என தங்களுக்குள்ளே குமுறி வருகின்றனர்.


0 Comments