Subscribe Us

header ads

இணையத்தை கலக்கும் 18 வயது மாணவனின் பறக்கும் துப்பாக்கி



அமெரிக்காவில் 18 வயது  மாணவன் பதிவேற்றம் செய்த பறக்கும் துப்பாக்கி குறித்த வீடியோ இணையத்தில் இரண்டு மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் கனெக்டிக்கட் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆஸ்டின்(18). அங்குள்ள பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வரும் ஆஸ்டின் ஜூலை 10 ஆம் தேதி யூடியூப் இணையதளத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்தார்.  

14 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், ட்ரோன் என்று கூறப்படும் ஆளில்லா குட்டி விமானத்தில் கைத்துப்பாக்கி பொருத்தப்பட்டு, அதன் விசைகள் தானாகவே இயக்கப்படுவது போன்று காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இணையத்தில் இரண்டு மில்லியன் முறை பார்க்கப்பட்ட இந்த காட்சிகள் அந்நாட்டில் வைரலாக பரவி வருகின்றன. 

இந்த நிலையில் சட்டவிரோதமாக ட்ரோனில் துப்பாக்கி பொருத்திய மாணவன் ஆஸ்டின் குறித்து விசாரணை நடத்த அமெரிக்காவின் மத்திய விமானத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments