Subscribe Us

header ads

Plan U பிழைத்தால் Plan D யை பயன்படுத்த மஹிந்த தரப்பு தயார் நிலையில் இருக்கிறதாம்....


முதலாவது திட்டம் வெற்றியளிக்காவிட்டால் இரண்டாம் திட்டத்தைப் பயன்படுத்தி எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முனைப்புக்களில் மஹிந்த ராஜபக்ஸ தரப்பு ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கோ அல்லது அவரது அதரவாளர்களுக்கோ வேட்பு மனு வழங்காவிட்டால், அதற்கான மாற்று வழிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் தனியான கூட்டணி ஒன்றை அமைத்து போட்டியிடுவதற்கு மஹிந்த ராஜபக்ஸ தரப்பு ஆயத்தமாகி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் தரப்பினர் விஜயராம வீதியில் காரியாலயம் ஒன்றையும் அமைத்துள்ளனர்.

தேவை ஏற்பட்டால் தனியாக போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments