Subscribe Us

header ads

செல்பி மூலமாகவும் இனி ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்யலாம்



ஆன்லைன் பரிவர்த்தனைகளில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க வாடிக்கையாளர்களின் செல்பி புகைப்படத்தை பயன்படுத்துவது குறித்த இறுதிக்கட்ட ஆராய்ச்சி பணியில் அமெரிக்காவின் பிரபல நிதி நிறுவனமான மாஸ்டர்கார்டு ஈடுபட்டுள்ளது. 

இன்றைய நவீன தொழில்நுட்ப புரட்சி காரணமாக ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெறுகின்றன. வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் கலாச்சாரமும் தமிழகத்தில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 

இக்கலாச்சாரம் பல நேரங்களில் நமக்கு உதவினாலும் சில நேரங்களில் அவை ஆபத்தாய் முடியும் வாய்ப்பும் இருக்கத்தான் செய்கின்றன. பொருட்களோ அல்லது பணப்பரிவர்த்தனையோ செய்யும்போது, நமது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டின் ரகசிய எண்ணை தெரிவிக்க வேண்டியது கட்டாயம். சிதம்பர ரகிசியமாக காக்கப்பட வேண்டிய ரகசிய எண்களை, பலகோடி பேர் இணைந்திருக்கும் இணையத்தில் நாம் பதிவிடுகிறோம். விளைவு அடுத்தவரின் கார்டை பயன்படுத்தி நிதி மோசடி என்ற மோசடிப் புகார்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வந்து கொண்டிருக்கின்றன.

மேற்கொண்ட பிரச்சனைகளில் இருந்து தமது வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் விதமாக மாஸ்டர்கார்டு நிறுவனம் புதிய உக்தியை கையாண்டுள்ளது. அதன்படி இன்றைய இளைஞர்களிடையே வைரலாக பரவி வரும் செல்பி கலாச்சாரத்தை ஆன்லைன் பரிவர்த்தனைகளில் பயன்படுத்தவதற்கான இறுதிக்கட்ட ஆராய்ச்சியில் மாஸ்டர் கார்டு நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஆஜய் கூறியதாவது. "வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரகசிய எண் சில நேரங்களில் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே, முறைகேடுகளை தவிர்க்க வாடிக்கையாளர்களின் செல்பி புகைப்படம், கைரேகை போன்றவற்றை ரகசிய எண்களுக்கு பதிலாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் தங்களின் செல்பி புகைப்படத்தை தேர்ந்தெடுத்தால், அவர்களின் புகைப்படம் 0 மற்றும் 1 என்ற பைனரி எண்களாக மாற்றப்பட்டு இணையதளம் வழியாக நிதிநிறுவனங்களின் ஒப்புதலுக்கு அளிக்கப்படும்" என்றார். இச்சேவையை பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களின் ஸ்மார்ட்போனில் மாஸ்டர்கார்டு ஆப்பை பதிவிறக்கம் செய்து செல்பி புகைப்படம் எடுத்து அனுப்பினால் போதும்.

Post a Comment

0 Comments