கடந்த அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் வீழ்ச்சியடைந்த நாட்டை மீண்டும் எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது குறித்த விசேட அறிவிப்பொன்றை எதிர்வரும் 9 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்ளவுள்ளதாக மஹிந்த சார்ப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரி.பீ. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹிந்தவைப் பிரதமராக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான கூட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. இதன்போதே அவர் பொது மக்களுக்கு இந்த அறிவிப்பை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இக்கூட்டத்தில் முன்னணியில் அங்கம் வகிக்கும் சுமார் 100 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும், இக்கூட்டத்தையடுத்து மாவட்ட மட்டத்தில் பிரச்சாரக் கூட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் முக்கிய கூட்டங்களில் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


0 Comments