Subscribe Us

header ads

Anti MR Team; மைத்திரி, ரணில், சந்திரிக்கா, சமல் இன்று ஒரே மேடையில்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, முன்னாள் சபா நாயகர் சமல் ஆகியோர் இன்று மாலை ஒரே மேடையில் ஒன்றுகூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதியின் 70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மாலை 5.00 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் விசேட நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே இவர்கள் ஒன்றுகூடுகின்றனர்.
இச்சந்திப்பு அரசியல் சார்ந்ததாக இல்லாதிருப்பினும், நடைமுறை அரசியல் நிலவரங்களின் அடிப்படையில் பார்க்கும் போது எதிர்கால அரசியல் நடவடிக்கைக்கான ஓர் ஒத்திகையாக இருக்குமா? என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். 

Post a Comment

0 Comments