ஞாயிற்றுக்கிழமை உணவில் கோதுமை சேர்த்துக்கொள்ள வேண்டும். திங்கட்கிழமை பச்சரிசியும், செவ்வாய்க்கிழமை துவரையும், புதன் கிழமை பாசிப்பயிறும், வியாழக்கிழமை கொண்டக்கடலையும், வெள்ளிக்கிழமை மொச்சையும், சனிக்கிழமை எள்ளும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளில் உளுந்தும், அசுவதி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் பொழுது கொள்ளு தானியத்தையும் நாம் உட்கொள்ளும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
கிரக தானியங்களை கிழமைக்கேற்றவாறு நைவேத்தியம் செய்தால் நவக்கிரகங்கள் நல்ல பலன்களை வழங்கும். இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும் உடல் பலம்பெறும்.


0 Comments