Subscribe Us

header ads

இங்கிலாந்து நாட்டின் இரும்பு மங்கை: 2 பிள்ளைகளின் தாய் என்றால் நம்ப முடிகிறதா?...



58 கிலோ தாஜ்மஹால் என்று வர்ணிக்கலாம்தான். ஆனால், இங்கிலாந்து ஆண்கள் கேத்தரின்னைப் பார்த்தாலே பத்தடி தள்ளி நடக்கிறார்கள். காரணம், அவர்தான் இங்கிலாந்தின் இரும்பு மங்கை.

இங்கிலாந்தின் சவுத்தாம்டன் கவுண்டியைச் சேர்ந்த கேத்தரின் பார்லெட்டின் எடை வெறும் 58 கிலோதான்.  ஆனால் 171 கிலோ எடையை அசால்ட்டாக தூக்குகிறார். அதைவிட அதிக எடையுள்ள கார், லாரி என்று எதையும் விட்டுவைக்காமல் மூச்சைப் பிடித்துக் கொண்டு இழுத்து ஒரு பெண்ணால் முடியாதது என்ன? என்பதை சொல்லாமல் செய்து காட்டுகிறார். 

31 வயதாகும் கேத்தரின் விளையாட்டுத்துறையில் நுழைந்து 3 வருடங்கள்தான் ஆகிறது. அதற்குள் தேசம், சர்வதேசம் என்று 2 சாம்பியன்ஷிப் பட்டங்களைப் பெற்றுவிட்டார். கேத்தரின்னின் வாழ்க்கை சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும், அப்படி சாதிக்க நினைக்கும் பெண்களை ஏதாவது சொல்லி வீட்டில் முடக்காமல், அவர்களுக்கான வாழ்க்கையை வாழ அனுமதிக்க நினைக்கும் ஆண்களுக்கும் நிச்சயம் ஒரு பாடம். 

இனி கேத்தரின்னே உங்களுடன் பேசுவார், “ சிகையலங்கார நிபுணராக (hairdresser) இருந்த எனக்கு ஸ்ட்ராங்மேன் என்ற டிவி ஷோவைப் பார்த்த பிறகுதான் பளுதூக்குவதில் ஆர்வம் வந்தது. அந்த ஆர்வத்தில் ஜிம்முக்கு சென்ற போதுதான் ஒரு உடல் வலிமைமிக்க பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. அவரைப் போலவே நானும் வலிமையானவளாக வேண்டும் என்று நினைத்தேன். ஸ்ட்ராங்வுமன் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக ஜிம்மிலேயே தவமிருந்து தீவிர பயிற்சி மேற்கொண்டேன். 

இங்கிலாந்தில் நடந்த அனைத்து சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பங்கேற்றேன். அடுத்தபடியாக, ஐரோப்பிய அளவில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டேன். இதோ இப்போது என் வீட்டின் வரவேற்பறையை அலங்கரிப்பது, கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் நடந்த சர்வதேச போட்டியில் நான் வாங்கிய சாம்பியன்ஷிப் பட்டம்தான். 

என் குடும்ப வாழ்க்கைக்கு நடுவில் தான் நான் இவ்வளவு சாதனைகள் புரிந்தேன். என் ஐந்து வயது மகன் கார்சனும், 12 வயது மகள் ஐலிசும் பள்ளியில் இருக்கும் போது, நான் ஜிம்மில் இருப்பேன். சில நேரம் அவர்கள் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த பின்னும் கூட ஜிம்மில் இருப்பேன். இப்படிப்பட்ட தருணங்களில் என் கணவர் எனக்கு உதவியாக இருப்பார்.

பலர் என்னுடைய உடல் வலிமையையும் தொடர் பயிற்சியால் என் உடல்வாகில் ஏற்பட்ட மாற்றத்தையும் வைத்து என் மீது மோசமான வார்த்தைகளைப் பிரயோகிப்பார்கள். ஆண்களைப் போல் பெண்கள் வலிமையாக இருப்பதில் எந்த தவறும் இல்லை. என்னுடன் அடிக்கடி ஜிம்முக்கு வந்ததால், இப்போது என் மகளும் அம்மா பெரியவளானதும் நானும் உன்னைப் போலவே வலிமையான பெண்ணாக ஆகப் போகிறேன். என்று கூறுகிறாள்.” 






 

Post a Comment

0 Comments