Subscribe Us

header ads

அரச வாகனத்தை தேர்தலுக்கு பயன்படுத்தினால் ஒரு லட்சம் ரூபா கட்டணம் செலுத்த வேண்டும்!– அமைச்சரவை தீர்மானம்


பிரதமர் உட்பட ஏனைய அமைச்சர்கள் தேர்தல் பணிகளுக்கு தமது உத்தியோகபூர்வ வாகனங்களை பயன்படுத்தினால், ஒரு வாகனத்திற்காக ஒரு மாத கட்டணமாக ஒரு லட்சம் ரூபாவை வழங்க வேண்டும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை கூறியுள்ளார்.

இதனடிப்படையில், பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், மாகாண முதலமைச்சர்கள், பிரதி சபாநாயகர், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் ஆகியோருக்கான சிறப்புரிமைகள் தொடர்ந்தும் வழங்கப்படும்.

சிறப்புரிமையாக கிடைக்கும் வாகனங்களை தேர்தல் பிரசாரப் பணிகளுக்குப் பயன்படுத்தினால், அதற்கான கட்டணத்தை அமைச்சுகளில் செலுத்த வேண்டும்.

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் இப்படியான நடைமுறை செயற்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தவிர உத்தியோகபூர்வ வாகனங்களை தேர்தலுக்கு பயன்படுத்தினால், அதற்கான எரிபொருள் கட்டணத்தை சொந்த பணத்தை கொண்டு செலுத்த வேண்டும்.

தேர்தலுக்கான விமானங்கள், உலங்குவானூர்திகளை பயன்படுத்தினால், அதற்கான செலவுகளை அவர்களே ஏற்கவேண்டும் எனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

உத்தியோகபூர்வ வாகனங்களைத் தேடி அறிந்து அதற்கான கட்டணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அமைச்சுகளின் செயலாளர்களது பொறுப்பு எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments