தண்ணீருக்குள் இருந்து ஊர்ந்து வெளியே வரும் முதலையை சாதாரணமாகவே பார்க்க பயமாகத்தான் இருக்கும். ஆனால், தென் ஆப்பிரிக்காவின் க்ரூகர் தேசிய பூங்காவில் ஒளிரும் பச்சைப் பசேல் நிறத்தில் தண்ணீரை விட்டு வெளியேறிய முதலையைக் காணும் ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கையில் சின்ன வயதில் கேள்விப்பட்ட அரக்கர் கதைகளை ஞாபகப்படுத்தியது.
ஒருபக்கம் இப்படி அந்த முதலையைப் பார்த்து பயந்துபோக, மறுபக்கத்தில் சிலர் அதை நீல பச்சை பாசி என்றும் அது கிட்டே வராது என்றும் கிண்டல் செய்துகொண்டிருந்தனர். இவர்களுக்கிடையே ஃபாஸத் (22) என்கிற ஆர்வக்கோளாறு புகைப்படக் கலைஞர் இந்த அரிய அழகான ஊர்ந்து செல்லும் ‘ஹல்க் முதலயை’ எண்ணிலடங்கா புகைப்படங்கள் எடுத்து இணையதளங்களில் வெளியிட்டார்.
ஆறுகள் நிறைந்த இந்த தேசிய பூங்காவில் கரையோரங்களில் பதுங்கியபடி செல்லும் இந்த முதலைகள் பச்சை நிற பாசி படிந்ததால் இப்படி ‘ஹல்க் லுக்’-கை பெற்றிருக்கலாம் என அந்த பூங்காவின் நிர்வாகிகள் கருதுகின்றனர். நேற்று இந்த பூங்காவுக்கு சென்றவர்களுக்கு ஹல்க்கை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.
அந்த வாய்ப்பை இழந்தவர்கள் ஃபாஸத் எடுத்த புகைப்படத்தைக் கண்டு ஆறுதல் அடையுங்கள்.




0 Comments