Subscribe Us

header ads

தேர்தல் வன்முறை தொடர்பில் முகப்புத்தகத்தில் ஆணையாளருக்கு தெரிவிக்கலாம் (விபரம் இணைப்பு)


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் ஆணையாளருக்கு தெரிவிக்கும் முகமாக முகப்புத்தகக் கணக்கொன்றை தேர்தல் ஆணையாளர் திறந்துள்ளார்.

ஆணையாளருக்கு கூறுங்கள் எனும் பெயரில் இந்த முகப்புத்தகக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த முகப்புத்தகக் கணக்கில் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் சட்டங்கள் மீறப்படும் விதிமுறைகள் குறித்தும் அறிந்துகொள்ள முடியுமென தேர்தல்கள் திணைக்களத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

முகப்புத்தகமானது மக்கள் மத்தில் மிகவும் வேகமாகப் பரவி, தாக்கத்தை ஏற்படுத்துவதனாலேயே தேர்தல் ஆணையாளர் இந்த முகப்புத்தக கணக்கை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments