Subscribe Us

header ads

புல்மோட்டையில் அமைந்துள்ள கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் வறுமானத்தை அதிகரிக்கும் வகையில் - றிசாத் பதியுதீன்

 - இர்ஷாத் றஹ்மத்துல்லா -


புல்மோட்டையில் அமைந்துள்ள கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் வறுமானத்தை அதிகரிக்கும் வகையில் அத்துறை சார்ந்தவர்களுடனான கலந்துரையாடலொன்று நேற்று கைத்தொழலில,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

கணிய மணல் கூட்டுத்தாபனத்தின் வளங்களை மேலும் அதிகரிப்பதுடன்,கணிய மணலில் இருந்து பெறப்படும் இன்னோரன்ன பொருட்களை கொண்டு பல் உற்பத்திப் பொருட்களை தேமற்கொள்வது தொடர்பில் கணிய மணல் கூட்டுத்தாபனத்தின் பிரதி நிதிகள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் மத்தியில் காணப்படும் கருத்தொறுமைப்பாடு என்பன இதன் போது பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக இலங்கைக்கு வெளிநாட்டு சலாவணியினை மேலும் கொண்டுவரும் வளம் மிக்கதொரு கூட்டுத்தாபனமாகவும்,தற்போதுள்ள வளங்களை பாதுகாப்பதுடன்,அதற்கு மேலதிகமாக இந்த கூட்டுத்தாபனத்தின் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பில் இதன் போது கவணனம் செலுத்தப்பட்டது.

கணிய மணல் அகழ்வு தொடர்பில் வழங்கப்படும் அனுமதிப் பத்திரத்தின் பெறுமதி  அதனுாடாக மேற்கொள்ளப்பட வேண்டிய இலக்கு தொடர்பிலும் இந்த கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டது.

கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.அலாம்,கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொரகொல்ல மற்றும் அமைச்சின் அதிகாரிகள்,கூட்டுத்தாபனத்தின் பொறியியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





Post a Comment

0 Comments