அபு அலா –
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் மத்திய குழுவின் தலைவரும் அதி உச்சபீட உறுப்பினருமாகிய எ.எல்.எம்.நஸீரின் ஏற்பாட்டின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் இப்தார் நிகழ்வு கடந்த புதன்கிழமை (08) இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை மத்திய குழுவின் உறுப்பினர்கள் எல்லோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதில் சுகாதார இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் யூ.எல்.வாஹிட், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எ.எஸ்.எம்.உவைஸ் உள்ளிட்ட பலர் சமகால அரசியல் தொடர்பாக தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.
அதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தற்போது தங்களின் அரசியல் நடவடிக்கைகளை எவ்வாறு எடுத்துச் செல்லல்வேண்டும், அதற்காக மத்திய குழுவினர் தங்களின் தேர்தல் நடவடிக்கைகளை என்ன முறையில் கொண்டு செல்லல்வேண்டும் என்றும் விளக்கமளித்தார்.







0 Comments