‘டவுண் சிண்ட்ரோம்’ என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட தனது இரண்டரை வயது மகனை வாஷிங் மெஷினுக்குள் திணித்து, அதைப் புகைப்படமாக எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றிய லண்டனைச் சேர்ந்த தாய்க்கு எதிராக பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கர்ட்னி ஸ்டீவர்ட் (21) என்பவருக்கு இரண்டரை வயதில் டவுண் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்ட மகன் ஒருவன் இருக்கிறான். அண்மையில் தனது மகனை வாஷிங்மெஷினுக்குள் திணித்து, அதனைப் புகைப்படமாக எடுத்து பேஸ்புக்கில் பதிவு செய்தார் கர்ட்னி.
இந்தப் படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பலர், கர்ட்னியை கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.
இது குறித்து கர்ட்னி கூறுகையில், "அவனுக்கு வாஷிங் மெஷின் மிகவும் பிடிக்கும். நகைச்சுவைக்காகத்தான் அந்த படத்தை எடுத்தேன்.” என்று கூறியுள்ளார். மேலும், அது பழைய வாஷிங்மெஷின் என்றும், சிறுவன் அதற்குள் இருந்தபோது அதன் பிளக்குகள் பிடுங்கப் பட்டிருந்ததாகவும் கர்ட்னி தெரிவித்துள்ளார். இச்செயலுக்காக அவர் மன்னிப்பும் கோரியுள்ளார்.
இருப்பினும், பேஸ்புக் மோகம் ஒருவரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் அங்கலாய்த்து வருகின்றனர்.


0 Comments