அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தில் வைல்ட் வெஸ்ட் வாட்டர் ஒர்க்ஸ் என்ற தீம் பார்க் உள்ளது. சம்பவத்தன்று அவேரி மிட்சல் என்ற 8 வயது சிறுமி அங்குள்ள ஸ்லைடில் விளையாடுவதற்காக இறங்கியுள்ளார். ஆனால், அவரது செயற்கைக் கால் பட்டு கீறல் விழலாம் என்பதால் அதில் விளையாடக் கூடாது என்று தீம் பார்க் ஊழியர் தடுத்துள்ளார். இதனால், அவேரி மிகவும் மனம் உடைந்துபோனார். அவேரியை கீழே இறக்கிய அந்த தீம் பார்க் ஊழியர்கள் வாசலுக்கே கொண்டுபோய் விட்டுள்ளனர்.
இச்சம்பவத்தை கண்டு மனம் நொந்த அவேரியின் தந்தை ‘பிளாஸ்டிக்கால் உருவான அந்த செயற்கை கால் மென்மையான வெளிப்பக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் நிச்சயம் கீறல் விழாது. இதுவரை அவேரி சென்ற எந்த தீம் பார்க்கிலும் ஊழியர்கள் இவ்வாறு அவளிடம் நடந்துகொள்ளவில்லை’ எனக் கூறினார்.
அவேரி பிறக்கும்போதே வலது கால் மூட்டில் இரண்டு எலும்புகள் உடைந்த நிலையிலேயே பிறந்தார். இதனால் அவருக்கு 2 வயது இருக்கும்போதே முட்டிக்கு கீழ் உள்ள கால் பகுதி நீக்கப்பட்டுள்ளது. எனினும், விடாமுயற்சியுடன் இருக்கும் அந்த சிறுமி ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். நம்பிக்கையோடு நடமாடிய குழந்தையின் மனதை இப்படி காயப்படுத்தியிருக்கின்றனர்.
‘இதுபோன்ற குழந்தைகளை இப்படி புறக்கணிக்காதீர்கள். நம் நாட்டுக்காக எல்லையில் ராணுவத்தில் வேலை செய்பவர்களையும் சேர்த்து 2 மில்லியனுக்கும் அதிகமானோர் செயற்கை பாகங்களோடுதான் நடமாடுகின்றனர்’ என சிறுமியின் தாய் பேஸ்புக்கில் குறிப்பிட்டார்.



0 Comments