இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரை சேர்ந்தவர் லியாலி. அவர் தற்போது கர்ப்பமாக உள்ளார். வயிற்றில் உள்ள குழந்தையின் நிலை பற்றி அறிவதற்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுத்து பார்த்தார். ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதித்து விட்டு ஸ்கேன் படங்களை அவருக்கு வழங்கினார்கள்.
வயிற்றில் உள்ள குழந்தையின் மேல் பகுதியில் டைனோசர் போன்ற ஏதோ ஒரு உருவம் படத்தில் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இந்த படத்தை நண்பர்களிடம் காட்டினார். வயிற்றில் தெரிந்த அந்த டைனோசர் உருவம் என்ன என்று தெரிவதற்காக டாக்டர்கள் மறுபடி ஆய்வு செய்கிறார்கள்.


0 Comments