சீனாவில் ஆயிரக்கணக்கான ஆண்கள் தங்கள் விந்தணுக்களை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதில் தீவிரமாக உள்ளனர். இதனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அங்கு ஆன்லைன் விந்தணு விற்பனை அதிகரித்துள்ளது.
அலிபாபா நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு இணையதளம், தாய்ப்பாலில் செய்யப்பட்ட சோப் உட்பட, சமூகத்தால் விலக்கப்பட்ட பல வித்தியாசமான பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த இணையதளம் சமீபத்தில் புதிய முயற்சியாக, ஆண்களின் விந்தணுவைக் கேட்டு தனது வலைதளத்தில் விளம்பரம் கொடுத்திருந்தது.
இந்த விளம்பரம் வெளியான 72 மணி நேரத்திலேயே 22 ஆயிரத்து 17 பேர் தங்கள் பெயர், அடையாள அட்டை விவரங்கள் உட்பட முழு விவரங்களையும் கொடுத்து விந்தணு தானத்திற்கான தன்னார்வலர்களாக பதிவு செய்துள்ளனர். இதில் 69 சதவீதத்தினர் பீஜிங், ஷாங்காய், குவாங்சு ஆகிய மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்களின் இந்த அமோக வரவேற்பிற்குக் காரணம் குழந்தையில்லாத தம்பதிக்கு உதவ வேண்டும் என்ற விழிப்புணர்வா, அல்லது இதற்காக கிடைக்கும் 500-700 டாலர் வரையிலான பணமா? என்பது தெளிவாகத் தெரியவில்லை.



0 Comments