முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்த மாவட்டத்தில் போட்டியிடுவது என்பதில் குழப்பத்தில் உள்ளார். மேலும் தனது மாவட்டமான அம்பாந்தோட்டையில் போட்டியிடுவதற்கு அவர் பெரும் அச்சப்படுகின்றார் என்று ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
ஜனவரி 8 ஆம் திகதி வெற்றி கொண்ட சவால்களை மீளவும் வெற்றிகொள்வது எமக்கு பெரிய சவால் அல்ல. எவர் தேர்தலில் களமிறங்கினாலும் நாமே பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக்கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போதைய அரசாங்கத்தினால் அரச ஊழியர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், அநீதி இழைக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்துகின்றார். எனினும் எந்த ஆட்சிக்காலத்தின் போது அரச ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.
குறுகிய காலத்திலுத்தினுள் நாட்டு மக்களுக்கு பல்வேறு சேவைகளையும் வழங்கியுள்ளோம். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியின் குற்றச்சாட்டுகள் நியாயமற்றதாக மாறியுள்ளது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீளவும் அரசியலில் பிரவேசிக்க முனைகின்றார். இவரது வருகையினால் நாம் அச்சம் அடையப்போவதில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்த மாவட்டத்தில் போட்டியிடுவது என்பதில் குழப்பத்தில் உள்ளார்.மேலும் தனது மாவட்டமான அம்பாந்தோட்டையில் போட்டியிடுவதற்கு பெரும் அச்சப்படுகின்றார்.
ஜனவரி 8 ஆம் திகதி வெற்றிக் கொண்ட சவால்களை மீளவும் வெற்றிக் கொள்வது எமக்கு பெரிய சவால் அல்ல. எவர் தேர்தலில் களமிறங்கினாலும் நாமே பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைப்போம்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனு நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக பூர்த்தியாகியுள்ளன.ஊழல் மோசடிகளுடன் தொடர்புபடாதோரையோ தெரிவு செய்துள்ளோம்.எனவே அடுத்த தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஆட்சிப்பீடமேறுவோம் என்றார்.


0 Comments