Subscribe Us

header ads

தேர்தலில் போட்டியிடாத எவரும் பா.உ. ஆக முடியாது – மஹிந்த


பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாத மற்றும் தேசியப் பட்டியலில் இடம்பெறாத எந்த ஒருவரும் பாராளுமன்றத்துக்கு உறுப்பினராக வருவதற்கோ அல்லது அமைச்சுப் பதவிகளை ஏற்பதற்கோ முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டங்களிலுள்ள இந்த விடயம் இம்முறை கண்டிப்பாக பின்பற்றப்படும் எனவும் ஆணையாளர் மேலும் கூறியுள்ளார்.
தேர்தலில் போட்டியிடாத, தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடாத சிலரை தேர்தலின் பின்னர் தேசியப்பட்டியலின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக்க சில கட்சிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபோன்ற நடவடிக்கையினால், பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுப்பதாகவும், தேர்தல் ஆணையாளர் என்ற வகையில் இவ்விடயத்தில் தலையிட வேண்டி வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

Post a Comment

0 Comments