Subscribe Us

header ads

அரக்கனான மகிந்தவை தேற்கடிப்போம் - ஷிப்லி பாருக் (PHOTOS)

(சப்னி)


அரக்கனான மகிந்தவை தேற்கடிப்போம் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினரும்  பாராளுமன்ற தேர்தலில் மரச்சின்னத்தில் 5ம் இலக்கத்தில் போட்டியிடும் பொறியலாளர் ஷிப்லி பாருக் அவர்கள் தெரிவித்தார். 

காத்தான்குடியில்  நேற்று (28) பாலமுனை பிரதேசத்துக்குறிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் யின் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. இந்த  நிகழ்வானது பாலமுனை இளைஞர் விளையாட்டுக்களக அமைப்பின் தலைவரும் புதிய காரியாலய பொறுப்பாளருமாகிய சியாட் அவர்களினால் ஒழுங்குசெய்யப்ட்டது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே தெரிவித்தார்.

மேலும் ஷிப்லி பாருக் உரையாற்றுகையில்;

காரியாலயம் திறப்பதன் நோக்கமானது எங்களுடைய செயற்பாடுகளை இந்த காரியாலயத்தின் ஊடாக மிக சிறந்த முறையில் அமைக்க வேண்டும் என்பதோடு எமது ஆதரவுகள் அதிகரிக்கப்ட வேண்டும் என்பதுமாகும். இதேவேளை இந்த காரியாலயத்தின் ஊடாக நாம் மிகமுக்கியமான இரண்டு விடயங்களை  மேற்கொள்ள வேண்டும். பாராளுமன்றத்துக்கு சிறந்த ஒரு தெரிவைக் கொடுப்பதும் அதே நேரத்தில் எமது சமூகத்தின் தனித்துவத்தை பாதுகாத்துக் கொள்வதுமாகும்.02. எமது சமூகம் அனுபவித்த கஸ்ட நிலைமைகளை மீண்டும் தங்களுக்கு தாங்களாகவே ஏற்படுத்திக் கொள்ளாமல் தவிர்த்துக் கொள்ள வேண்டிய சூழலை ஏற்படுத்த வேண்டி இருக்கிறது. என்றும் மேலும் தெரிவித்தார். 

இரண்டாவது விடயத்தில் எமது உரிமைகளை பறித்தெடுத்து அவற்றை எல்லாம் எமக்கு தரமறுத்த முன்னால் ஜானாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை பிரதமராக்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரையும், மீண்டும் எமது சமூகத்தின் இரத்தத்தை ஓட்டத் துடித்துக் கொண்டிருக்கும் அரக்கர்களான மகிந்த மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் தேற்கடிப்பதே இதன் நோக்கமாகும் எனக் கருத்து தெரிவித்தார்.









Post a Comment

0 Comments