எனது இல்லத்தை தொழகுடியர்களுக்காகவும் தவாப் செய்யகுடியவர்களுக்காவும் சுத்தம் செய்யுங்கள் என்ற இறைவனின் ஆணைக்கு இணங்க புனித இல்லத்தின் ஒரு பகுதியாக உள்ள ஹஜருல் அஸ்வதுக்கு நறுமணம் தடவும் அழகிய நிகழ்வு சில தினங்களுக்கு முன்பு மக்காவில் நடை பெற்றது
மக்காவின் இமாம்களில் ஒருவரும் புனித தலங்களின் பராமரிப்பு குழுவின் தலைவருமான அப்துரஹ்மான் சுதைஸ் தனது கரங்களால் ஹஜருல் அஸ்வதுக்கு நறுமணம் தடவுவதை தான் படம் விளக்குகிறது
நன்றி : சையது அலி பைஜி
அஸ்வத் கல்லை முத்தம்மிட்டார் மக்கா தலைமை இமாம் அப்துல் ரஹ்மான் சுதைஷி
1610. அஸ்லம் (ரலி)அறிவித்தார்.
ஹஜருல் அஸ்வத் (எனும் கருப்பு நிறக்) கல்லை உமர்(ரலி) முத்தமிடுவதை பார்த்தேன். அப்பொழுது அவர்கள், “நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால், நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்!” என்று கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 25. ஹஜ்


0 Comments