மனாமா
இஸ்லாமியர்களின் 2 வது புனித தளமான மதினா மசூதியில் சீட்டு விளையாடிய விவகாரம் தொடர்பாக சவுதி அதிகாரிகள் 4 சகோதரர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரமலானின் கடைசி 10 நாட்கள் ஆன்மீக காரணங்களுக்காக இதிகாப் எனப்படும் மசூதியில் தங்குவது வழக்கமாக பொதுவான இஸ்லாமிய நடைமுறையாக உள்ளது. அப்போது சகோதரர்கள் மசூதியின் உள்ளே சீட்டு விளையாடும் போது எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது. இதற்கு சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.புனித தளத்தில் இத்தகைய செயலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என கூறி இருந்தனர்.
இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடபட்டு உள்ளது.இந்த சகோதரர்களுக்கு 10 முதல் 17 வயது இருக்கும். அவர்கள் கைது செய்யபட்டு உள்ளனர். போலீஸ் செய்தி தொடர்பாளர் பகத் அல் கனம் கூறியதாக அல்மர்சத் செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டு தகவலில் சகோதரர்கள் இதிகாப் இல்லை என்றும் அவர்கள் விடியல் தொழுகைக்காக பெற்றோருக்காக காத்திருந்ததாக தெரியவந்து உள்ளது. இளையசிறுவன் சீட்டு வைத்து இருந்து உள்ளான் மற்ற சகோதரகள் அவனுடன் சேர்ந்து விளையாடி உள்ளனர்.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகாரிகளுக்கு பரிந்துரைக்கபடுகிறது.


0 Comments