முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாகவும் அதற்கான வேட்புமனுத்தாக்கலில் நேற்று கையொப்பம் இட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலுக்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்புமனுவுக்கான கையொப்பம் இடும் பணிகள் இன்று உத்தியோகபூர்வமாக நடைபெற இருக்கின்ற நிலையில் மஹிந்த ராஜபக்ஷ நேற்று கையொப்பம் இட்டுள்ளார்.


0 Comments