ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மீண்டும் அதிகாரத்திற்கு வந் தால் எதிர்காலத்தை இந்த நாட்டில் சிங்கள இனம் இல்லாமல் போய்விடும் என தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் அமைப்பாளர் டாக்டர் குணதாஸ அமரசிங்க தெரிவித்தார்.
மேலும், நாட்டின் அதிகாரத்தை மஹிந்த ராஜபக் ஷவுக்கு கொடுப்பதற்கு அவரை பிர தமராக்குவது சகல தேசிய சக்திகளதும் கடமையாகும் எனவும் தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தல்" எனும் தொனிப்பொருளில் தேசிய ஒருங்கமைப்பு ஒன் றியம் ஏற்பாடு செய்திருந்த செய் தியாளர் மாநாடு நேற்று தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கேட் போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கை யிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
இந்த நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு தள்ளிவிட்டு அன்று பிரபாகரனின் பயங்கரவாத செயலுக்கு இந்தியா, அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மேற்கத்தைய நாடுகள் உதவிபுரிந்து வந்தன.
இந்த சக்திகள் தங்களது நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கே முயற்ச்சிக்கின்றன. பிரபாகரனின் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னர் மேற்கத்தைய வாதிகளின் நிகழ்ச்சி நிரல் இருந்ததையும் விட தற்போது முன்னுக்கு வந்துள்ளது. ஏனென்றால் அவர்களுக்கு தேவையான அரசாங்கமே அதிகாரத்தில் இருக்கின்றது.
மேலும் இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததுடன் வடக்கிலிருந்த இராணுவ முகாம்களை அங்கிருந்து அகற்றியது. புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது மற்றும் இந்த நாட்டில் மனித படுகொலை இடம்பெற்றதாக விக்கினேஸ்வரன் கூறிய வார்த்தைகளுக்கு உந்துசக்தி கொடுத்தது இவையனைத்தும் நாட்டை பிரிப்பதற்கே இந்த அரசாங்கம் ஒத்துழைப்பு கொடுத்து வந்தது. இவ்வாறான நிலையில் மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தால் எதிர்காலத்தில் இந்த நாட்டில் சிங்கள இனம் இல்லாமல் போய்விடும்.
எனவே இவற்றை கருத்திற் கொண்டு நாட்டின் எதிர்காலத்தை மஹிந்த ராஜபக் ஷவின் கரங்களுக்கு வழங்குவதற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவரை பிரதமராக்குவதற்குத் தேவையான நடவ டிக்கைகளை எடுப்பது சகல தேசிய சக்திக ளதும் கடமையாகும் என்றார்.


0 Comments