Subscribe Us

header ads

கணவனை நிர்வாணமாக்கி தாக்கிய மனைவி: அதிர்ச்சி வீடியோ வெளியானது


உறவினர்கள் சுற்றி நிற்க, கணவனை நிர்வாணமாக்கி கண்மூடித்தனமாக கேஸ் டியூப்பால் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளமான வட்ஸ்அப்பில் பரவி வருகிறது. இச்சம்பவம் மலேசியாவில் இடம்பெற்றிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் தற்போது ஏராளமான அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி அவ்வப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறன.
இந்நிலையில் உறவினர்களின் தூண்டுதல் பேரில் ள் கணவனை மனைவி கேஸ் டியூப்பால் சரமாரியாக தாக்கும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உறவினர்கள் அவரை அடிக்க தூண்டுவதும், அந்த பெண் அடிக்கும் போது அந்த காட்சிகளை உறவினர்கள் வீடியோ எடுப்பதும் பின்னணி குரலில் பதிவாகியுள்ளது.

பெண்ணின் உறவினர்களே இந்த வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளனர்.  முதலில், உள்ளாடையுடன் இருக்கும் சுமார் 45 வயதுடைய ஒரு ஆண் நபர் ஒருவரை அவரது மனைவி விசாரணை செய்கின்றார்.
பின்னர், ஆவேசமடைந்து தன் கையில் உள்ள டியூப்பால் தாக்குதல் நடத்துகின்றார்.

இதன்போது குறித்த நபருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் அணிந்திருந்த உள்ளாடையும் அகற்றி விட்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments