எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சொத்து விபரங்களை முடிந்தால் வெளியிடுமாறு பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சவால் விடுத்துள்ளார்.
பொதுத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தங்களது சொத்துக்களை மக்களிடம் சமர்ப்பிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் தூய்மையான கைகளுடன் போட்டியிடுவதாக தனது முகநூலில் வீடியோ ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
எந்தக் காலத்திலும் பொதுமக்கள் பணத்தை தாம் துஸ்பிரயோகம் செய்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் பணத்தில் வழங்கப்பட்ட சம்பளத்தைக் கொண்டே கடந்த ஐந்து ஆண்டுகளும் தாம் சீவியம் நடத்தியதனைச் சொல்ல வெட்கப்படப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தாம் ஏற்கனவே பொய்யில்லாத உண்மையான சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளதாகவம் அநேகமான அரசியல்வாதிகள் பொய்யான விபரங்களை வெளியிடுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுச் சொத்துக்கைள துஸ்பிரயோகம் செய்யும் வேட்பாளர்களை மக்கள் தெரிவு செய்யக் கூடாது என அவர் கோரியுள்ளார்.


0 Comments