எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணியாக செயற்பட்டு நாட்டின் பிரதமரை உருவாக்கப்போவதாக ஜாதிஹ ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை குறிப்பிட்டுள்ள அத்துரலிய ரத்ன தேரர் தாங்கள் பொதுத்தேர்தல் தொடாபாக சில யோசனைகளை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எங்கள் யோசனைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கவுள்ளோம்,அவர் அதனை ஏற்று அவரது வெற்றிக்கு காரணமதன கூட்டணிக்கு தொடர்ந்தும் தலைமை தாங்க தயார் என்றால்,நாங்கள் அதனை ஏற்றுக்கொள்வோம்.
அது சாத்தியப்படாத பட்சத்தில் நாங்கள் மூன்றாவது அணியாக களமிறங்கி பிரதமரை உருவாக்குவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை ஜனாதிபதி தண்டிக்கவில்லை – அதுரலிய ரதன தேரர்
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தண்டிக்கவில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகள் ஈடுபட்ட சில அரசியல்வாதிகளுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில அரசியல்வாதிகளை கைது செய்ய ஆறு மாத கால அவகாசம் காணப்பட்ட போதிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இந்தக் கைதுகளை தடுத்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில் பாராளுமன்றம் முக்கிய பங்கு வகிக்கும் என ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பிரச்சாரம் செய்யப்பட்ட போதிலும் உண்மையில் அவ்வாறு நடக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி மூலம் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என மக்கள் கேள்வி எழுப்பி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜப்கஸவை மீண்டும் பிரதமராக அமர்த்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments