முந்தல் பிரதேசத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 17 வயது இளைஞன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட 14 வயதுடைய சிறுமிக்கும் சந்தேக நபருக்குமிடையில் காதல் தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் சிறுமி தொலைபேசி மூலம் அழைப்பை மேற்கொண்டு காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
பின்னர் சிறுமியும் இளைஞனும் வீட்டில் தகாத உறவில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த சிறுமியின் தாய் அதனை கண்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தாயின் முறைப்பாட்டையடுத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான இளைஞனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


0 Comments