Subscribe Us

header ads

வெற்றிலை கிடைக்காவிட்டால் பூமொட்டில் வரும் மஹிந்த குழு!



எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரி – மஹிந்த கூட்டணியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிட முடியாது போனால் நமது இலங்கை சுதந்திர முன்னணி (Our Sri Lanka Freedom Front) என்ற கட்சியில் பூமொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக இலங்கை தேசிய முன்னணி என்ற பெயரில் கிரிக்கட் துடுப்பாட்ட மட்டை சின்னத்தில் இருந்த கட்சி பெயர் மாற்றப்பட்டு நமது இலங்கை சுதந்திர முன்னணி என்று பெயரிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்து சுசில் பிரேமஜயந்தவின் கையொப்பத்துடன் அண்மையில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது.
எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடும் போது , இது சுதந்திர கட்சி சார்பாக எடுக்கப்பட்ட முடிவல்ல என்று தெரிவித்திருந்தார்.
அத்துடன் சுசில் பிரேமஜயந்தவினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டதன் விளைவாக ஐ.ம.சு. கூட்டமைப்பிலிருந்து ஜாதிக ஹெல உறுமய வெளியேறியதுடன் எஸ். பி. நாவின்ன ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்வதாக அறிவித்தார்.
இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுடன் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கூட்டணி அமைக்க முடியாது போனால் நமது இலங்கை சுதந்திர முன்னணி என்ற கட்சியில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments