Subscribe Us

header ads

போலி ஜெனீவா அறிக்கை ஒன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளது?


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்த அறிக்கை என்ற போர்வையில் போலி அறிக்கை ஒன்று பொதுத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தரப்பினர் இவ்வாறு போலிப் பிரச்சாரமொன்றை ஆரம்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை சர்வதேச ரீதியான விசாரணை நடத்தி அந்த அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாத அமர்வுகளில் சமர்ப்பிக்க உள்ளது.

இந்த அறிக்கையை முன் கூட்டியே கிடைக்கப் பெற்றதாகத் தெரிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் அதனை பயன்படுத்த மஹிந்த தரப்பினர் வியூகம் அமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் நடைபெறவுள்ள ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் இந்த போலி அறிக்கை வெளியிடப்பட உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்புச்  செயலாளர் கோதபாய ராஜபக்ஸ மற்றும் அப்போது உயர் இராணுவ பதவிகளை வகித்த 40 பேர் யுத்தக் குற்றவாளிகள் என இந்தபோலி அறிக்கையில் குறிப்பிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இம்முறை தேர்தல் பிரச்சாரத்தை சிங்கள பௌத்த பேரினவாத கொள்கைகளை மையப்படுத்தி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் புலம்பெயர் சமூகத்துடனான பேச்சுவார்த்தைகள் கிழக்கில் தனி முஸ்லிம் அலகு உள்ளிட்ட சில காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 

Post a Comment

0 Comments