முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்காவிட்டால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்ளும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமக்கு ஒத்ழைப்பு வழங்கிய மற்றும் தமக்கு நெருக்கமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனித்தனியாக உறுப்பினர்களை அழைத்து அவர் இவ்வாறு மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்கியமைக்கான காரணங்களை தெளிவுபடுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வேட்பு மனு வழங்கப்படாவிட்டால், ஐக்கிய தேசியக் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொண்டு ஆட்சி பீடமேறும் சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
1977ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிட்டியது போன்று பெரும்பான்மை பலம் கிட்டினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.
கட்சியை அந்த நிலைமக்கு இழுத்துச் செல்ல தம்மால் முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றைய தினம் இரவு அமைச்சர் ராஜித சேனாரட்னவுடனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
எனினும், மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஏன் வேட்பு மனு வழங்கப்பட்டது என்பது பற்றிய எவ்வித உத்தியோகபூர்வ தெளிவுபடுத்தல்களையும் இதுவரையில் ஜனாதிபதி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments