Subscribe Us

header ads

சம்பளம் வழங்க பெருமளவில் கடன் பெறும் மைத்திரி அரசு! சாடுகிறார் மஹிந்த


தற்போதைய அரசாங்கம் சம்பளம் வழங்குவதற்காக பில்லியன் கணக்கில் கடன் பெற்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தங்காலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அன்று அனாகரிக்க தர்மபாலவிடம் விசாரணை நடத்தியது போன்று இன்று என்னிடம் விசாரணைகள் நடத்தப்படுகின்றது.

நெடுஞ்சாலைகள் அமைத்து விட்டு நெடுஞ்சாலைகளின் செலவு எப்படி என்று கேட்கின்றார்கள்.

தற்போது பில்லியன் கணக்கில் கடன் பெற்று தான் சம்பளமேனும் வழங்குகின்றார்கள்.

தர்மபாலவிற்கு அன்று குற்றம் சுமத்தியது போன்று தற்போதைய அரசாங்கம் 05, 06 மாத காலமாக எங்களுக்கு எதிராக குற்றம் சுமத்திக்கொண்டு நாட்டில் எந்த ஒரு செயற்பாடுகளையும் மேற்கொள்ளாமல் இருக்கின்றார்கள்.

இன்று கோபங்களும் பழிவாங்களும் மாத்திரமே இடம்பெறுகின்றது.

தர்மபாலவை தாக்கியது போன்றே இன்று எங்களையும் தாக்குகின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments