சிங்களவர்களை இனவாதிகளாக வெளிக்காட்ட முயற்சிக்கப்படுவதாக பெபிலியான சுனேத்திரா மஹாதேவி பிரிவேனாதிபதி கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 70 வீதமானவர்கள் சிங்களவர்களாகும் இவர்கள் இனவாதிகள் என வெளிக்காட்டும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை நாட்டை பிளவுபடுத்த வழியமைக்கும்.
இன்னும் சில நாடுகளில் நாட்டை பிளவடையச் செய்ய முயற்சிக்கப்படுகின்றது. சிங்களவர்களுக்கு எதிராக கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.
அண்மையில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இந்த நாடு சிங்கள நாடு என எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் வடக்கில் படையினர் போதைப்பொருள் விற்பனை செய்வதாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியிருந்தார்.
தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கும் தேசிய கொடியில் காணப்படும் சிங்கத்தை அகற்றி வேறும் கொடி அமைக்கவும் அமைச்சரவையில் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டை 12 ஆண்டுகள் ஆட்சி செய்த சந்திரிக்காவிற்கு இந்த நாடு யாருடையது என்பது தெரியவில்லையாம்.இவற்றின் ஊடாக மிக நீண்ட காலமாக நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கப்பட்டுள்ளமை அம்பலபமாகியுள்ளது.
பராக்கிரமபாகு மன்னருக்கு பின்னர் நாட்டை ஐக்கியப்படுத்திய பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையே சாரும் என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 27ம் திகதி பெபிலியானவில் நடைபெறவுள்ள ஜயபிரித் நிகழ்வு குறித்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


0 Comments